12 February 2018

தோழர்களின் உற்சாகப் பங்கேற்போடு நடந்து முடிந்த
7வது மாவட்ட மாநாடு
 
தோழர்களே! தோழியர்களே!
         விருதுநகர் மாவட்டச்சங்கத்தின் 7வது மாவட்ட மாநாடு 08.02.2018 & 09.02.2018 ஆகிய தேதிகளில் விருதுநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் மாவட்டத்தலைவர் தோழர் G.ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர் P.முத்துச்சாமி அவர்கள் சம்மேளனக் கொடியை ஏற்றி வைத்தார். தோழர் S.வெங்கடப்பன் அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச்செயலர் தோழர் N.ராம்சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
தோழர் சேது தனது துவக்கவுரையில் ஊதிய மாற்றத்தில் தலைவர்களின் அணுகுமுறை பற்றிய தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
 
SEWA மாநிலச்சங்கத்தின் துணைச்செயலர் தோழர் R.பிரேம்குமார் பேசுகையில் NFTE சங்கம் எல்லோருக்கும் தாய்ச்சங்கம் அதன் வெற்றிக்கு எப்போதும் துணைநிற்போம் என்றார்.
 AIOBC சங்கத்தின் மாவட்டச்செயலர் தோழர் S.கார்த்திகேயன் பேசுகையில் முதன்மைச்சங்கத்தின் அடாவடி அணுகுமுறையைச் சாடினார்.
 TEPU சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர்V.கணேசன் பேசுகையில் NFTE முன்னெடுக்கும் எத்தகைய போராட்டங்களிலும் தங்கள் சங்கம் முன்னிற்கும் என்றார்.
 AIBSNLEA சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் M.பிச்சைக்கனி பேசுகையில் மத்திய அரசின் நமது நிருவனத்திற்கெதிரான செயல்பாடுகளைக் கண்டித்தார்.
 







AIBSNLOA சங்கத்தின் மாவட்டச்செயலர் தோழர் T.C.பார்த்தசாரதி பேசுகையில் தோழர் O.P.குப்தா வலியுறுத்திய Financial Viability மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவை என்றார்.

 SEWA சங்கத்தின் மாவட்டச்செயலர் தோழர் G.ராஜகுரு தனது உரையில் NFTE SEWA இரண்டும் வேறு வேறு அல்ல எனவும் எப்போதும் இணைந்தே பயணிப்போம் என்றார்


நமது சங்கத்தின் முன்னாள் மாநிலச்சங்க நிர்வாகியான தோழர் JP என்ற ஜெயப்பிரகாஷ் நமது சங்கத்தின் கடந்தகாலச் செயல்பாடுகளை நினைவுகூர்ந்தார்.
 நமது சங்கத்தின் முன்னாள் மாவட்டத்தலைவர் தோழர் T.ஜெபக்குமார் NFTE என்ற ஆலமரத்தின் விழுதுகளாய் நாங்கள் நிற்கிறோம் என்றார்.
 AIGETOA சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் H.விக்டர் சாம்சன் பேசுகையில் NFTE பலமிக்க சங்கம் என்றும் , நிறுவனத்தின் தற்போதைய தேவை வருவாய்ப்பெருக்கம் மட்டுமே அதனை நோக்கி ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றார்.
 AIBSNLPWA சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர் N.சண்முகம் பேசுகையில் உங்களின் பிரதிபிம்பம் நாங்கள் எனவும் , ஓய்வு பெறும் தோழர்கள் கவனிக்க வேண்டிய விசயங்களை நினவுபடுத்தினார்.
 AIBSNLEA சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர் A.நாராயணன் பேசுகையில் நான் அடிப்படையில் NFTE உறுப்பினர் என்றும் , எல்லாரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் குணம் எனக் கூறி இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
 TMTCLU ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்தின் மாவட்டச்செயலர் தோழர்K.ஜெயசீலன் தனது உரையில் சம்பள பட்டுவாடா தாமதம் , ஆட்குறைப்பு ஆகிய விசயங்களை மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக கூறினார்.
 மாநிலத்துணைச்செயலர் தோழர் D.ரமேஷ் தனது உரையில் NFTE சங்கத்தின் தேவையை அனைவரும் உணர்ந்து வருக்கின்றனர் எனவும் , அனைவரையும் நம்மால் மட்டுமே சிறப்பாக அரவணைத்துச் செல்லமுடியும் எனக் கருதுகிறார்கள் எனவும் கூறினார். மேலும் ஊதிய மாற்றத்தை பெற்றே தீர்வோம் என தோழர்களுக்கு நம்பிக்கையளித்தார்.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலர் தோழர் தி.ராமசாமி பேசுகையில் கட்சிப்பணிக்காக தோழர் சக்கணன் அவர்களை சிறப்பாக தயார்படுத்தி தந்துள்ளீர்கள் என்றார். மேலும் அரசின் தொழிலாளர் விரோத , மக்கள் விரோத கொள்கைகளைச்சாடினார். இயக்கத்திற்கு உங்கள் சங்கம் பக்கபலமாக உள்ளது எனவும் உங்கள் மாநாடு பெருவெற்றியடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
 
மாநிலச்செயலர் தோழர் K.நடராஜன் அவர்கள் தனது சிறப்புரையில் ஊதியமாற்றம் , டவர் நிறுவனம் , MTNL இணைப்பு , ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் அதன் மீதான நமது சங்கம் எடுத்து வரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தார்.
 செயல்பாட்டறிக்கை , வரவு செலவு அறிக்கை ஆகியவை முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டு அனைவராலும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 புதிய மாவட்டச் சங்கநிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர் M.ராஜேந்திரன் தலைவராகவும் , தோழர் N.ராம்சேகர் செயலாளராகவும் , தோழர் S.வெங்கடப்பன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 புதிதாக நமது சங்கத்தின் இணைந்த தோழர்களை மாநிலச் செயலர் சால்வை அணிவித்து கெளரவித்தார்.
 தோழர் P.பாஸ்கரன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.
 நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  , ஊழியர் நலனுக்குமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.