18 December 2017



தோழர்களே! தோழியர்களே!

15.12.2017 அன்று வெள்ளிக்கிழமை அன்று அருப்புக்கோட்டையில் நமது சங்கத்தின் மாவட்டச்செயற்குழுவும் , அருப்புக்கோட்டை கிளைமாநாடும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மாவட்டத்தலைவர் தோழர் G.ராகவன் தலைமை தாங்கினார். கும்பகோணம் மாவட்டச்செயலரும் , TMTCL ஒப்பந்த்தொழிலாளர் சங்கத்தின் தமிழ்மாநிலப் பொருளாளருமான தோழர் M.விஜய் ஆரோக்கிய ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கிளைச்செயலர்கள் மற்றும் மாவட்டச்சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டு தலமட்ட பிரச்சினைகளையும் , வேலை நிறுத்த அனுபவங்கள் பற்றியும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தால் உண்டான அனுபவம் இனி வரும் காலம் போராட்ட காலமாக இருக்கப்போவதாக தோழர்கள் பலரும் தெரிவித்தனர்.

வத்ராயிருப்பு , திருவில்லிபுத்தூர் பகுதிகளில் செல்டவர் சிக்னல் சரியாக கிட்டைப்பதில்லை எனவும் பலமுறை கூறியும் தீர்வில்லை. இப்பிரச்சினையை சரி செய்ய CGM அவர்களுக்கு கடிதம் கொடுக்கவும் , கிளை மாநாடு நடத்தாத கிளைகள் ஜனவரிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும். மாவட்ட மாநாடு பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்துவது எனவும் தோழர்களிடம் மாவட்ட மாநாடு நன்கொடையாக ரூ.200/- வசூலிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மாநில உதவிச் செயலர் தோழர் D.ரமேஷ் பேசுகையில் நடந்து முடிந்த வேலைநிறுத்தத்தை , மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு எப்படி சிக்கித்தவிக்கிறது என தெளிவாக எடுத்துரைத்தார்.

தோழர் M.விஜய் ஆரோக்கியராஜ் பேசுகையில் நமது சங்கத்தின் அணுகுமுறையால் ஊதிய மாற்றம் சரியான திசைவழியில் செல்வதாகவும், நடந்து முடிந்த போராட்டங்களில் பங்கெடுத்த அனைத்து தோழர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் காலவரையற்ற வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாத்தெனவும் அதனை ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிகரமாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை எனவும் வலியுறுத்திப் பேசினார்.

தோழர்கள் ராஜேந்திரன் , சம்பத்குமார் , மன்னன் மார்த்தாண்டன் , விஜயகுமார் , ராமதாஸ் , வெங்கடப்பன் , முனியசாமி , பாண்டி ஆகிய கிளைச்சங்க நிர்வாகிகள் கிளைமட்டத்தில் தேங்கியுள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். மாவட்டச் செயலர் தோழர் ராம்சேகர் பிரச்சினைகள் தீர்விற்காக நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது மீண்டும் காலதாமதம் ஏற்பட்டால் போராட்ட அறைகூவல் விரடுப்போம் என கூறினார்.
நமது சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் மதிவாணன் அவர்கள் கலந்து கொண்டு தனது வாழ்த்துரையை வழங்கினார்.நமது வழிகாட்டியான மூத்த் தோழர் சேது அவர்கள் பேசும் போது நாம் நடத்திய போராட்டங்களே நமக்கு கிடைத்த அனுபவங்கள் என்பதை எடுத்துரைத்தார். மோடி அரசு ஒரு தொழிலாளர் விரோத அரசு அதனை எதிர்க்க அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய காலம் வந்து விட்டது எனக் கூறினார்.

மாவட்டப் பொருளர் தோழர் செல்வராஜ் நன்றி கூறினார்

அருப்புக்கோட்டை கிளைமாநாடு : தோழர் ராகவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர் முனியசாமி அனைவரை வரவேற்றார். செயல்பாட்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை ஆகியவை ஒருமனதாக ஏற்கப்பட்டது. தோழர் S.செல்வராஜன்-II தலைவராகவும் , தோழர் முனியசாமி செயலராகவும் தோழர் கோவிந்தன் பொருளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.