26 November 2016

ஊதிய மாற்றம் 2017 

   தொழிற்சங்க உரிமை படைத்த ஊழியர்களுக்கான 7வது ஊதிய மாற்றக்கொள்கை (இரண்டாம் பாகம்) WAGE POLICY FOR 7th ROUND (2nd PART) 13/06/2013 அன்று DPEயால் வெளியிடப்பட்டது. இந்த ஊதிய மாற்றம் 01/01/2012ல் இருந்து அமுலாகும். இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியத்தை மாற்றும் பொதுத்துறைகளுக்கானது.


  பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் நடத்தும் பொதுத்துறைகளுக்கான WAGE POLICY அறிவிப்பு DPEயால் இன்னும் வெளியிடப்படவில்லை. 2012 ஊதிய மாற்றத்திற்கான வழிகாட்டுதல் 13/06/2013ல் தான் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியானால் 2017 ஊதிய மாற்றத்திற்கான வழிகாட்டுதல் எப்போது வெளியிடப்படும் என்பதுதான் இன்றைய பொதுத்துறை ஊழியர்களின் பெரும் கேள்வியாக உள்ளது. உடனடியாக வழிகாட்டுதலை வெளியிடக்கோரி அனைத்து சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.


நாம் 3 வது ஊதிய மாற்றத்தை நோக்கி பயணித்து வரும் வேளையில்,

  • நமது நிறுவனத்தை இலாபகரமாக மாற்றினால் மட்டுமே ஊதிய மாற்றம் என உயர் அதிகாரிகள் கூறி வருவதை முற்றாக ஒதுக்கிவிடமுடியாது.
  • நிறுவனம் ஊதிய நிலையை இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யலாம். ஆனால் அதற்கான முழுசெலவையும் நிறுவனமே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். 
  • அரசு எவ்வித உதவியும் செய்யாது , தாங்கள் தயாரிக்கும் / அளிக்கும் சேவையின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது.
  • நலிவடைந்த நிறுவனங்களில் ஊதிய மாற்றம் கிடையாது. BRPSE (  Board for Reconstruction of Public Sector Enterprises ) ஒப்புதலுடன் ஊதிய மாற்றத்தை அமுல்படுத்தலாம்.
  • 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்த நிறுவனங்கள் அமைச்சரவை ஒப்புதலுடன் ஊதிய மாற்றத்தை அமுல்படுத்தலாம்.
  • ஊழியர்களின் ஊதிய நிலைகள் அதிகாரிகளின் ஊதிய நிலைகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • ஜுன்'9 - 2016 அன்று நீதியரசர் சதீஷ்சந்திரா தலைமையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட ஊதியக்குழு அதிகாரிகளின் சமபளத்தை இறுதி செய்வதற்கென அமைக்கப்பட்டுள்ளது.
  • ஊதியக்குழு 7வது ஊதியக்குழுவின்  பரிந்துரைகளின் அடிப்படையில்  தனது அறிக்கையை தாக்கல் செய்யும்.
  • 6 மாத காலத்திற்குள் அறிக்கையை வெளியிடும்.
  • ஊதியமாற்றம் கோரும் சங்கங்கள் குழுவின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும்.
  • 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பரிந்துரைகள் இருக்க வேண்டும் என்பதால் 30 சதவிகித ஊதிய மாற்றம் என்பது கேள்வி குறியாகவுள்ளது.
  • சென்றமுறை ONGC அதிகாரிகள் நடத்திய கடும் போராட்டம் 30 சதவிகித ஊதியமாற்றம் எனபதை உறுதிப்படுத்தியது.
  • அதிகாரிகளுக்கு ஊதியக்குழு அமைத்து 6 மாதங்கள் ஆகியும் ஊழியர்களின் ஊதியமாற்றத்திற்கான வழிகாட்டுதலை DPE அமைப்பு இதுவரை வெளியிடவில்லை. நமது சங்கம் உட்பட அனைத்து சங்கங்களும் இதுகுறித்து DPEக்கு கடிதம் எழுதியுள்ளன.
  • 7வது ஊதியக்குழு Group ' B ஊழியர்களின் 4 ஊதிய நிலைகளை ஒரே ஊதிய நிலையாக மாற்றியுள்ளது.
  • 7வது ஊதியக்குழு 16 சதவிகிதத்திற்குள் ஊதியம் உயராமல் கவனித்துக் கொண்டது.
                     7வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமுலாக்கப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய நிலைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் நமது தமிழ்மாநிலச் சங்க திருச்சி கருத்தரங்கம் நமது மத்திய சங்கத்திற்கும் , நமது சகோதரச் சங்கங்களுக்கும் நெருக்கடியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.