22 August 2016

அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்ப்போம்செப்’2 வேலை நிறுத்தப் போராட்ட பிரகடனம்



      செப்’2 – 2016 அன்று இந்தியாவின் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள வேலைநிறுத்தப்போராட்ட அறைகூவலுக்கிணங்க மத்திய  அரசு ஊழியர்கள் , பொதுத்துறை மற்றும் வங்கி ஊழியர்கள் மேலும் அணிதிரப்பட்ட , திரட்டப்படாத தொழிலாளர்கள் என 20 கோடிக்கும் மேலான இந்திய தொழிலாளி வர்க்கம் அனைத்தும் மத்திய அரசின் சமுக விரோத , மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் செய்திட முடிவெடுத்து தயாரிப்பு வேலையில் இறங்கியுள்ளனர்.

      25 வருடங்களாக உலகமய , நவீனமய , தாராளமயக் கொள்கைகளினால் கொண்டுவரப்பட்ட பொருளாதார வளர்ச்சி உள்நாட்டு உற்பத்தியைச் சீரழித்து தடையற்ற அந்நிய முதலீட்டுக்கு மட்டுமே வழிவகுத்தது. இதனால் உள்நாட்டு தொழில்கள் அழிக்கப்பட்டு 70 சதவிகித மக்களை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளியதோடு மட்டுமின்றி தேசத்தில் மக்களிடையே நுகர்வுக் கலாச்சாரத்தைப் பெருக்கி வளர்ச்சிப் பாதையிலிருந்து நாட்டை திசை திருப்பியுள்ளது.      8 லட்சம் கோடிகளுக்கு மேல கருப்புப்பணம் அந்நிய தேசங்களில் பதுக்கப்பட்டுள்ளது என புள்ளிவிபரங்களை அடுக்கும் மோடி அரசு அதை வெளிக்கொணராமல் பதுக்குபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது முற்றிலும் மக்கள் விரோதமானது.      100 வருட காலமாக தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தங்களை  அந்நிய பகாசுரக் கம்பெனிகளுக்கு ஆதரவாக நீர்த்துப் போகச் செய்து பெருமுதலாளிகளின் அடிவருடியாகச் செயல்படும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை இந்திய தொழிலாளி வர்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.      நமது BSNL நிறுவனத்தைச் சீரழிக்க டவர் கம்பெனி , வலைப்பின்னலை தனியாகப் பிரித்தல் , அனைத்து பணிகளையும் தனியார் வசம் ஒப்படைத்தல் எனத் திட்டமிட்டு வருவதோடு மட்டுமின்றி நமது நிறுவனத்தை முற்றிலும் விற்றுத் தீர்த்திடும் நோக்கில் ERP அமுலாக்கம் , Business Area அமைப்பது என முழுமையான BSNL ஊழியர் விரோத அரசாக மாறிவரும் மத்திய அரசின் போக்கினை நமது NFTE சங்கம் நமது கூட்டணிச் சங்கங்களான TEPU  மற்றும் PEWA சங்கங்களோடு இணைந்து கூட்டாக எதிர்க்க களம் கண்டுள்ளது.      மக்களைக் காத்திட , நம்மைக் காத்திட , நமது நிறுவனத்தைக் காத்திட நாடு முழுவதும் 20 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இழப்புகளை ஓரம்கட்டி வர்க்க உணர்வுடன் செப்’2-2016 அன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தோழமைச் சங்கங்கங்களுடன் கைகோர்த்துச் செயல்படுவோம்.