Wednesday, 21 June 2017


இலாபம் இல்லை என்றாலும் ஊதிய மாற்றம் சாத்தியமே!
“ Affordability an Antonym to Profitability “ 


பொதுத்துறை அதிகாரிகளுக்கான மூன்றாவது ஊதியக்குழுவை 09/06/2016ல் மத்திய அரசு அமைத்தது. விரும்பத்தக்க, சாத்தியமான, முடிந்தஅளவுக்கு என்ற ஏகப்பட்ட வரையறைகளுடன் ஏற்புடைய சம்பள விகித மாற்றங்களைத் தரவும்; அதுவும் பரிந்துரைக்கும் சம்பள உயர்வு எந்த அளவு அதிகாரிகளின் திறமையை, நிறுவனத்தின் உற்பத்தியை / இலாபத்தை அதிகரிக்கும் என்பதோடு இணைந்து பரிந்துரையை வழங்கக் குழுவுக்கு வழிகாட்டுதல் தரப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் சதீஷ் சந்திரா தலைமையிலான 3வது சம்பளக்குழு தனது அறிக்கையை 21/11/16ல் தந்தது. இருட்டில் வைக்கப்பட்ட அறிக்கை இரண்டு மாதங்களுக்குப் பிறகே 2017 ஜனவரி 27ல் வெளியிடப்பட்டது.

15 சதவிகித உயர்வு, அதுவும் லாபம் ஈட்டும் கம்பெனிகளுக்கு மட்டுமே. மேலும்,‘வரிக்கு முந்தைய லாபம்’ ( Profit Before Tax – PBT ) எனும் கம்பெனியின் நிதிநிலைமை மீது, ஊதிய உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் என்பதை இணைத்தே பரிசீலிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு. இத்தனையும் பார்த்து கம்பெனியால் ஊதிய உயர்வு வழங்க இயலும் (AFFORDABILITY) என்பதும் கம்பெனியின் முந்தைய மூன்று ஆண்டுகளின் PBT அம்சத்தோடு இணைந்தே பரிசீலிக்க வேண்டுமாம்.

Monday, 5 June 2017


தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனம்

விருதுநகர் மாவட்டம்


சிவகாசியில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காமல் மாற்றல் உத்தரவில் ஒரு சங்க ஆதரவோடு செயல்படும் , தொழில் அமைதியைக் கெடுக்கும் சிவகாசி கோட்ட அதிகாரியைக் கண்டித்து…

07.06.2017 புதன்கிழமை
சிவகாசி கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
 


14.06.2017 புதன்கிழமை முதல்
விருதுநகர் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில்
காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம்


அனைவரும் கலந்து கொண்டு
போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் தோழர்களே!


தோழமையுள்ள

G.ராகவன்               N.ராம்சேகர்            P.செல்வராஜ்
மாவட்டத்தலைவர்        மாவட்டச்செயலர்       மாவட்டப்பொருளர்


Thursday, 1 June 2017

3வது ஊதியமாற்றச் செய்திகள்

நமது தோழர்களுக்கு 3வது ஊதிய மாற்றம் சம்பந்தமாக நமது மத்திய சங்கம் எடுத்துவரும் முன்னெடுப்புகளை தோழர்கள் அறிந்து கொள்வதற்காக நமது விருதுநகர் மாவட்டச் சங்கம் சார்பாக ஒரு தனி இணையபக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தள முகவரி : http://bsnlthirdprc.blogspot.in


Wednesday, 31 May 2017

சீர்மிகு சிவகாசி மாவட்டச் செயற்குழு

  

நமது மாவட்டச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 30.05.2017 செவ்வாய்கிழமை அன்று சிவகாசி OCB தொலைபேசி நிலைத்தில் மாவட்டத்தலைவர் தோழர் ராகவன் தலைமையில் நடைபெற்றது.
 
தோழர் மோகன்தாஸ் தலைமையிலான தோழர் குழாம் மாவட்டச் செயற்குழுவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர். தோழர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
 
செயற்குழுவின் தொடக்கமாக தோழர் ராகவன் செயற்குழு விவாத்திக்க வேண்டிய கருப்பொருளை விளக்கி உரையாற்றினார்.
 
மாவட்ட அமைப்புச்செயலர் தோழர் ராஜேந்திரன் அஞ்சலி உரையற்றினார்.
 
சிவகாசி கிளைச் செயலர் தோழர் கருப்பசாமி செயற்குழுத் தோழர்களை வரவேற்று பேசினார்.

மாவட்ட துணைத்தலைவர் தோழர் சுந்தர்ராஜன் நன்றியுரையாற்றினார்.

பணிஓய்வு பெறும் தோழர் நாகராஜன் மாவட்டச் செயற்குழுவில் கலந்து கொண்ட தோழர்களுக்கு மதிய விருந்து  வழங்கினார். தோழரின் பணி ஒய்வுக்காலம் சிறப்புற அமைய மாவட்டச்சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Tuesday, 23 May 2017


Tuesday, 2 May 2017

தலைமைப் பொது மேலாளருடன் சந்திப்பு :
நமது மாநிலச் சங்க நிர்வாகிகள் இன்று தலைமைப் பொது மேலாளரை சந்தித்து கீழ்கண்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.
1. விருதுநகர் மாவட்ட பிரச்னைகள்.
 
(i) விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் பாரபட்ச போக்கு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த போக்கு மாற உரிய நடவடிக்கைள் எடுக்கப்படும் என்று நிர்வாகத்தின் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

(ii) இரு தோழர்களுக்கு இம்மியூனிட்டி மாற்றல்களுக்கான உத்தரவு இன்று வெளியாகும் என உறுதியளிக்கப்பட்டது .
 
2. ஒப்பந்த ஊழியர்கள் பற்றிய பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொது மேலாளர் நிர்வாகத்துடன் விரிவான விவாதம் நடத்தப்படும்
 
3. மாநில கவுன்சில் கூட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று உறுதியளிக்கப்பட்டது.

நமது மாவட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி தீர்வு கண்ட மாநிலச் சங்கத்திற்கு விருதுநகர் மாவட்டச்சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

Sunday, 30 April 2017


உழைப்பவன் கொண்டாட ஒரு தினம் மே தினம்

தோழர்கள் , தோழியர்கள் 
அனைவருக்கும் 
மே தின நல்வாழ்த்துகள்